நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி ஹைகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நல வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.பாலு இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் எதிர்க்கட்சியான திமுக பெரும் அமளியில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சியான திமுக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சமூக நல வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.பாலு மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் குற்றவாளி ஜெயலலிதா படத்துக்கு முன்பு முதல்வராக பழனிசாமி பெறுப்பேற்றது சட்டவிரோதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications