திட்டமிட்டப்படி உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம்: வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை: வழக்குரைஞர் சட்ட விதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்கள் தொடர்பாக, நீதிபதிகள் ஆய்வு குழுவுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படாதால், திட்டமிட்டப்படி வரும் திங்கள்கிழமை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் உயர்நீதிமன்றம் மேற்கொண்டுள்ள புதிய திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய திருத்தத்தில் ஆட்சேபனைக்குரிய விதிகள் எவை என்பது குறித்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் கருத்து தெரிவித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதற்கென உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.மணிகுமார் தலைமையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, ராஜீவ்ஷக்தேர், எம்.எம்.சுந்தரேஷ், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய ஆய்வு குழுவையும் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நியமித்தார். இந்த ஆய்வுக்குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் அறிவழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிபதிகள் குழுவுடன் வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தினோம். அப்போது புதிய திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆலோசனை கூட்டம் வரும் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எந்தவொரு முடிவு எட்டப்படவில்லை. எனவே திட்டமிட்டப்படி திங்கள்கிழமை (ஜூலை 25) உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications