காவிரி மேலாண்மை வாரியம், காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரி நாம் தமிழர் கருத்தரங்கம்- பாமக பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் காஷ்மீர் சிறுமி ஆசிஃபா மரணத்திற்கு நீதி கோரியும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரியும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் காஷ்மீரில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை மாபெரும் கருத்தரங்கத்தை நடத்துகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள பயாஸ் மகால், ஆல்பர்ட் திரையரங்கம் அருகில் இன்றுகாலை 10 மணி முதல் மாலை 3 வரை இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பாமக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலு இயக்குநர் பாரதிராஜா, சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ், மணியரசன் மற்றும் சீமான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அறிவிப்பு:
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) April 27, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், அன்புமகள் ஆசிஃபா-வின் மரணத்திற்கு நீதி கேட்டும் நாம் தமிழர் #வழக்கறிஞர்_பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம்#நாளை 28-04-2018 காலை 10 மணிமுதல்
எழும்பூர், பயாஸ் மகால், ஆல்பர்ட் திரையரங்கம் அருகில்#சீமான் #பாரதிராஜா #மணியரசன் pic.twitter.com/0qj7F6Tl6I












Click it and Unblock the Notifications