சசிகலா முதல்வராவது குறித்து வைகோவின் கருத்து என்ன தெரியுமா?
தமிழக முதல்வராக சசிகலா நடராஜன் பதவியேற்க உள்ளது குறித்து தமிழகத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களின் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள சசிகலாவிற்கு பல கட்சித்தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும் கருத்து கூறியுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.அதே போல இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சசிகலாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசில் நிச்சயமற்ற தன்மை உருவாக வாய்ப்பு உள்ளது என்று முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். சட்டசபைக் கட்சித் தலைவராக ஒருவரை தேர்வு செய்ய கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உள்ளது. சசிகலா முதல்வர் ஆவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள வி.கே.சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் உள்ள கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் செயல்படுவார் என நம்புகிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சசிகலாவால் டெபாசிட் கூட வாங்க முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டமாக கூறியுள்ளார்.
இது அதிமுக கட்சியின் உள்கட்சி விவகாரம்.எனவே இது குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது . தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள சசிகலாவுக்கு வாழ்த்துகள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
சசிகலாவை சட்டசபை கட்சித்தலைவராக தேர்ந்தெடுத்தது அந்த கட்சியின் உட்கட்சி விவகாரம். இது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை என்று வைகோ கூறியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் முதல்வரான போதும் தான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications