அம்மாவுக்கு வாழ்த்து சொன்ன அருண் ஜேட்லி, வெங்கைய்யா, ரங்கசாமி...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது செய்தியில், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்துள்ளார்.

Leaders greet CM Jayalalitha

வெங்கையநாயுடு வாழ்த்து

இதேபோல் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, முதலமைச்சராவதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

பொன்ராதாகிருஷ்ணன் வாழ்த்து

மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், குளச்சல் துறைமுகம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் விரைவு படுத்த ஜெயலலிதாவின் வருகை பெருமளவு உதவும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.

தமிழிசை சவுந்தர்ராஜன் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மனுபானக்கடை இல்லாத தமிழகம் என்பதே முதல்வராக பொறப்பேற்றதும் முதுலமைச்சரின் முதல் அறிவிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சந்திரசேகர ராவும்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் தொலை பேசி மூலமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+