விகடன் குழுமத் தலைவர் பாலசுப்ரமணியன் உடலுக்கு பல்துறைப் பிரபலங்கள் அஞ்சலி
சென்னை: சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் உடலுக்கு பல்வேறு துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
79 வயதாகிய பாலசுப்ரமணியன் கடந்த வெள்ளிகிழமையன்று இரவு மாரடைப்பினால் காலமானார்.

மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் தரவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி அவரது உடல் இன்று தானமாக அளிக்கப்பட உள்ளது.

அதற்கு முன் இறுதி அஞ்சலிக்காக அவருடைய உடல் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, ஏ1 டிவோலி அப்பார்ட்மெண்ட், எண். 11, கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அவரின் பூத உடலுக்கு பல்வேறு துறையை சேர்ந்த பிரமுகர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

எழுத்தாளர் சுபா, பாரதி கிருஷ்ணகுமார், சு.வெங்கடேசன், ஆறாம்திணை சிவராமன், நக்கீரன் கோபால், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பங்குச்சந்தை நிபுணர்கள் நாகப்பன் மற்றும் புகழேந்தி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார், சூர்யா, சூரி, கிரேசி மோகன், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், பிரமிட் நடராஜன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications