பிரதமர் மோடியுடன் மதுராந்தகத்தில் மேடை ஏற போகும் கூட்டணி கட்சித் தலைவர்கள் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடை ஏற போகும் அரசியல் கட்சியினர் யார் யார் என்பதை காணலாம். தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக தற்போது பிஸியாக இருக்கின்றன. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேரம், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில்தான் பழைய கட்சிகள் நீடித்து வருகின்றன.

narendra modi maduranthagam

காங்கிரஸ் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் தெளிவான விஷயம் இல்லாமல் இருந்தது. அந்த கூட்டணியில் அதிமுகவுடன் பாஜக மட்டுமே இருந்தது. இந்த நிலையில் தற்போது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளன.

இதனால் இனி அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும் என தெரிகிறது. இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டேன் என கூறியிருந்த டிடிவி தினகரன், இரு நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இணைந்துவிட்டார்.

இந்த நிலையில் இன்றைய தினம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நிகழ்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அவருடன் மேடையேற போகும் அரசியல் கட்சித் தலைவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

  • எடப்பாடி பழனிசாமி- அதிமுக
  • டிடிவி தினகரன்- அமமுக
  • அன்புமணி ராமதாஸ்- பாமக அன்புமணி
  • பாரிவேந்தர்- இந்திய ஜனநாயக கட்சி
  • ஜி.கே.வாசன்- தமாகா
  • ஜான் பாண்டியன்- தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
  • ஏ.சி.சண்முகம்- புதிய நீதி கட்சி
  • ஜெகன்மூர்த்தி- புரட்சி பாரதம்

உள்ளிட்டோர் ஆவர். பிரதமர் மோடியின் மதுராந்தகம் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உச்சக் கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நாளை பிற்பகலில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அந்த வழியாக போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மாமண்டூர் மற்றும் மாமல்லபுரம் வழியாக திருப்பி விடப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரை இயக்கி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறக்கி பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.

அந்த பகுதி முழுவதுமே மத்திய பாதுகாப்பு படையினரும் போலீஸாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். செங்கல்பட்டு பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மேடையேறும் தலைவர்களுடன் பிரதமர் மோடி கையை உயர்த்தி தங்கள் கூட்டணியின் பலத்தை காட்டுவார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+