காரைக்குடி ரசாயன ஆலையில் விபத்து: மாணவிகள் மயக்கம்- பொதுமக்கள் சாலை மறியல்
காரைக்குடி: காரைக்குடி அருகே ரசாயன ஆலையில் சாயம் சுத்திகரிக்கும் குழாயில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக வெடித்து சிதறி உள்ளது. இதிலிருந்து வெளிப்பட்ட வாயு காரணமாக மாணவிகள் சிலர் மயக்கமடைந்தனர் இதனால் பதற்றம் உருவாகியுள்ளது.
காரைக்குடியில் கோவிலூரில் டிசிபி லிமிட்டெட் தனியார் ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று குழாய் திடீரென்று வெடித்துச் சிதறியது இந்த விபத்து காரணமாக ரசாயன புகை பரவியது. ஊருக்கும் புகை பரவியதால் கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

ரசாயன ஆலையை சுற்றி உள்ள சுமார் 10 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த புகை மண்டலத்தால் பாதிக்கப்பட்டனர். ஒரு சில மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விபத்து நடந்த ஆலையை உத்தரவிடும்படி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலையையும் முற்றுகையிட்ட பொது மக்கள் அலுவலகத்தை கற்களை வீசி தாக்கினர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சென்னை-காரைக்குடி பஸ்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
இந்த ரசாயன ஆலையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த ஆலை 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அடிக்கடி விபத்து நடைபெறுவதால் ஆபத்தான நிலையில் வசித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து கூறியுள்ள காரைக்குடி எம்.எல்.ஏ, அலுவலகத்தில் மிசின் கோளாறு வருவது சகஜம்தான். ஆண்டுக்கு ஒருமுறை மிசின்களை சரிசெய்யவேண்டும் என்று கூறினார். ஆலை நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார் காரைக்குடி எம்.எல்.ஏ
மதுரை - காரைக்குடி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரை செல்லும் பேருந்துகள் மானகிரி வழியாக திருப்பி விடப்படுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications