சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் தப்பினர்
சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுக்கு நடுவே அதிர்ஷ்டவசமாக 154 பயணிகள் உயிர்தப்பினர்.

ஹைதராபாத்தில் இருந்து 154 பயணிகளுடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்றிரவு 8.45 மணியளவில் தரை இறங்கியது. அப்போது அதன் சக்கரங்கள் இயங்காமல் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, விமானத்தில் இருந்து சுமார் 100 லிட்டர் ஹைட்ராலிக் எண்ணெய் ஓடுதளத்தில் கசிந்தது. அந்த எண்ணெய் தீப்பிடிக்காததால் பயணிகள் பெரும் விபத்தில் இருந்து தப்பினர்.
தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் பயணிகளை மீட்டனர். ஓடுபாதையில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அந்தப் பாதையில் விமானங்கள் புறப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய 10 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, போர்ட் பிளேருக்குச் செல்ல இருந்த அந்த குறிப்பி்ட்ட விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு.. பெங்களூர், மும்பை பயணிகளுக்கு அதிர்ச்சி -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications