மது விலக்கு: குஜராத்திடம் கற்க வேண்டும்- வைகோ

Subscribe to Oneindia Tamil

கலிங்கபட்டி: நாட்டிற்கு வருமானம் மதுக்கடையால் தான் என்று கூறுகிறார்கள்.. ஆனால் குஜராத்தில் மோடி மதுவிலக்கை அமல்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் வையாபுரி மாரியம்மாள் கோப்பை இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அறிவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கி வைகோ பாராட்டினார், பின்னர் மாணவர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது,

பல ஆன்ண்டுகலுக்கு முன்பு வீட்டு மடிகளில் புறாக்கள், குருவிகள், கரையும் காக்கைகள், வட்டமிடும் பருந்துகளையும் அவைகள் எழுப்பும் ஓசைகளையும் கேட்கமுடியும். ஆனால் சுற்றுப்புற சூழல் மாசால் அவற்றினையும், அவற்றின் ஓசைகளையும் கேட்கமுடியவில்லை..

பறவை இனங்கள் அழிந்துவருகின்றன.. ஆனால் அந்த ஓசைகளை இங்கு குழுமி இருக்கும் குழந்தைகள் எழுப்பும் ஓசைகளில் கேட்கிறேன்.. மனதுக்கு இதமாக உள்ளது..

எனது தந்தையார் வையாபுரி அவர்கள் திருக்குறளின் 1330 பாடல்களை அடிபிறழாமல் பாடும் திறமையும், 10 உரை ஆசிரியர்களின் பொழிப்புரைகளை படித்து தேர்ந்தவர்.. எனது தந்தையும், குடும்பமும் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்.. எனது தாயார் சமையல் செய்வதில் வல்லவர்..

9 பிரதமரை சந்தித்த தலைவர் என்று என்னை பாராட்டுகிறார்கள், 3 வயது சிறுமி வைகோ தாத்தா என்று என் கையை பற்றி பேசும் பொழுது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.. குழந்தைகள் வைகோ என்று பெயரைச் சொல்லி அழைக்கும் தலைவனாக இருக்கிறேன்..

காங்கிரசை வீழ்த்துவோம்

காங்கிரசை வீழ்த்துவோம்

சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் என்ற அல்லாமா-இக்பால் கவிதை வரிகளை அன்ன 1964 ல் சென்னை கல்லூரி மாணவனாக சென்னை கடற்கரை மணலில் அமர்ந்து கேட்டிருக்கிறேன்.. அதே போன்று சிட்டுக்குருவியான நாங்கள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம், வரும் தேர்தல் களம்.. நாட்டின் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சியை மக்கள் வீழ்த்தி விட்டார்கள்..

பணம் சம்பாதிக்க வரவில்லை

பணம் சம்பாதிக்க வரவில்லை

முறை தவறி நிர்வாகம் செய்தால் மக்கள் நம்மையும் வீழ்த்தி விடுவார்கள் என்று அறிஞர் அண்ணா கூறியதை கேட்டுள்ளேன்.. அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிப்பது என்பது ஈனப்பிழைப்பு.. இதைப்போன்று வேறு கிடையாது.. எனது தாத்தா 1923 ம் ஆண்டு இந்த வீட்டை கட்டி உயரத்தில் அ. கோ என்று தீர்க்க தரிசி போல் எழுதி வைத்துள்ளார்.. இதனை போடாமல் என் தாத்தா விட்டிருந்தால் வைகோ அரசியலை வைத்து சம்பாதித்து விட்டார் என்று பிறர் கூறியிருப்பார்..

தனி ஈழம் மலரும்

தனி ஈழம் மலரும்

இந்த ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டு, ஜனநாயக போர்க்களத்திற்கு செல்கிறேன்... தாய்மார்களும், முதியோர்களும் வெற்றிபெற வாழ்த்தி அனுப்புங்கள்.. வாலிபர்களே தோள்கொடுங்கள்.. இந்த ஆண்டு பிரபாகரனின் கனவான தமிழீழ தேசம் மலரும்.. அவரது காவு நனவாகும்.. எனது முயற்சினால் ஐநா, மனித உரிமை கழகத்தினர் இலங்கை அரசு புதைத்த தமிழர்களை அடையாளம் காட்டியது.. இது அடியேனின் முயற்சியால் நடந்தது..

மதுவிலக்கு அவசியம்

மதுவிலக்கு அவசியம்

நாட்டிற்கு வருமானம் மதுக்கடையால் தான் என்று கூறுகிறார்கள்.. ஆனால் குஜராத்தில் மோடி மதுவிலக்கை அமல்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார்..

நாட்டில் 90 சதவிகித குற்றங்கள் மதுவினால் நடைபெறுகிறது என்று மூத்த காவல் துறை அதிகாரி கூறியுள்ளார்.. மதுவிலக்கு, விவசாயிகள் நலன், மீனவர்கள் நலன், எதிர்கால தமிழக நலம் காக்க போராடுகிறேன்..

இளைஞர்கள் மதுவிற்கு அடிமை

இளைஞர்கள் மதுவிற்கு அடிமை

காங்கிரஸ் ஆண்ட காலங்களில், இராஜாஜி, காமராஜர், அண்ணா ஆட்சி காலங்களில் மதுக்கடைகள் இல்லை.. அதற்குப்பின் மதுவிலக்கை நீக்கி மதுவை கொண்டுவந்தவர்கள் மன்னிக்கமுடியாதவர்கள் ஆவர்.. மதுவிலக்கு இருந்தால் கள்ளச்சாராயம் இருக்கும்.. ஆனால் ஒரு சிலர் மட்டுமே குடிப்பார்.. ஆனால் இன்று தந்தை மகன் சேர்ந்து குடிக்கிறார்கள்.. பூரண மதுவிலக்கு வேண்டும் என்று நடைபயணம் சென்றேன்..

உழைக்கும் உற்சாகம்

உழைக்கும் உற்சாகம்

அற நூலகள் வழியின்படி நாடு செல்லவேண்டும்.. தாய் மண்ணில் நான் 4 நாட்கள் விழாக்களில் கலந்துகொண்டதன் மூலம் வருடம் முழுதும் போராட எனக்கு உழைக்கும் உற்சாகம் தருகிறது.. எதிரிகளை எழமுடியாத அளவிற்கு வீழ்த்த புறப்பட்டு உள்ளேன்.. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என வைகோ பேசினார்..

நிகழ்ச்சியில் மாநில மாணவரணி அமைப்பாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், வைகோ-வின் தம்பியுமான வை.ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+