ஏன் இந்த வேலை?.. படைப்பாளிகள் மீது லீனா மணிமேகலை பாய்ச்சல்!
சென்னை: தமக்கு எதிராக எழுத்தாளர் ப்ரேம் உட்பட படைப்பாளிகள் வெளியிட்ட கண்டன அறிக்கை குறித்து எழுத்தாளர் லீனா மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார்.
லீனா மணிமேகலையின் சர்ச்சைக்குரிய கவிதை ஒன்றுக்கு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கவிஞர் பழனிவேள் விமர்சனம் ஒன்றை முன்வைத்திருந்தார். இதற்கு லீனா மணிமேகலை பதிலளித்திருந்தார்.
இந்த விவாதத்தில் எழுத்தாளர் ப்ரேமும் சில கருத்துகளை முன்வைத்திருந்தார். இதற்கு லீனா எழுதியிருந்த கடுமையான விமர்சனம் பிரச்சனையாகிவிட்டது. இதற்கு எதிர்வினையாக அவதூறுகளின் விரல் பற்றி ஒளிரும் ஆளுமைகள்: லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது.

லீனா மணிமேகலை பதில்...
இந்த அறிக்கை தொடர்பாக லீனா மணிமேகலை தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். லீனா மணிமேகலை பதிவு செய்துள்ளதாவது:
ஜெயலலிதாவிற்குப் பிறகு சொன்ன பொய்களையே திரும்ப பேசுவது, அவதூறு வழக்கு போடுவது, தன் "அவை மந்திரிகளை" வைத்து அறிக்கைகள் வெளியிடுவது என ரொம்ப பிசியாக இருப்பது மாலதி மைத்ரி தான்.

பிள்ளையை பலி கொடுப்பதா?
ப்ரேமும் மாலதி மைத்ரியும் தங்கள் கேவலமான நடத்தையை மறைப்பதற்கு, தங்கள் பிள்ளையை பலி கொடுப்பது கொடூரமான விளையாட்டு.

இழக்க ஒன்றுமில்லை
இது பாண்டிச்சேரியில் இருக்கும் ரமேஷுக்கு தெரியுமா தெரியவில்லை. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. என் மேல் மாலதி கம்பெனி தொடுத்திருக்கும் அவதூறுகளுக்கு நான் கிரிமினல் வழக்கு தொடுத்தால், பிரேமிற்கு தான் இழப்பு.

கடுமையான சாடல்
யப்பா அதிகாரி தேவேந்திர பூபதி, கவிஞர்களோட வறுமையைப் பயன்படுத்தறது பத்தாம பொய் அறிக்கைகள்ல கையெழுத்து போட்டாவது இலக்கியவாதி ஆயிடலாம்னு நினைக்கிறது ரொம்ப தப்புக் கணக்கு! மு.வி.நந்தினின்னு ஒரு பத்திரிக்கையாளர். இதுக்கு முன்னாடி கூட சூரியக்கதிர் ன்னு ஒரு பத்திரிக்கைக்கு வம்படியா குட்டி ரேவதியையும் என்னையும் வச்சு சர்ச்சை பண்ணாங்க. இவங்க இப்ப ஒரு இணைய இதழ் நடத்தறாங்களாம். அந்த இதழில் முகநூலில் நடக்கிற உரையாடல்களை சம்மந்தப்பட்டவங்க யார் கிட்டயும் கலந்துக்காம, தலையும் இல்லாம வாலும் இல்லாம காபி-பேஸ்ட் பண்ணி ஒட்டி இதழியல் பண்ணுவாங்களாம். இதெல்லாம் ஒரு பொழப்பு. இந்தம்மா நடத்தற மஞ்சள் பத்திரிகை லிங்க் தான் இந்த அறிக்கைக்கு சாட்சி. Puppy Shame!

யாரையுமே தெரியலையே...
மாலதி மைத்ரியின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் பத்து பேர் தவிர அறிக்கையில வேற எந்த பெயரும் எனக்கு தெரியல. இதுக்கு முன்னாடி வெளியிட்ட அறிக்கையிலே கேட்காமலேயே போட்டுக்கிட்ட பெயர்களில் கூட சிலர் பொருட்படுத்தறவங்களா இருந்தாங்க. வேலை இருப்பவர்களுக்கு ஒரு வேலை. இல்லாதவர்களுக்கு பல வேலைகள். காட்டறது தான் காட்டறீங்க, பயப்படற மாதிரி பூச்சாண்டி காட்டுங்க மக்களே!

வெட்கம் கெட்ட வேலை..
Update: அறிக்கையில் பெயர் இருந்தவர்களில் எனக்கு தெரிந்த இரண்டு பேரை விசாரித்ததில், தாமிராவிற்கு அறிக்கை குறித்த கேள்வி ஞானம் கூட இல்லை, மதியழகன் சுப்பையா அறிக்கை குறித்து இப்பொது தான் விசாரிக்க கிளம்பியிருக்கிறார். மாலதி மைத்ரி - உங்களுக்கு ஏன் இந்த வெட்கம் கெட்ட வேலை?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications