கோவை அருகே சிறுத்தை புலி நடமாட்டம் : விடிய விடிய உருட்டு கட்டைகளுடன் ரோந்து சுற்றிய மக்கள்
கோவை: கோவை அருகே உள்ள குனியமுத்தூரில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கோவையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது குனியமுத்தூர் நகராட்சி. இங்குள்ள ஒரு வீட்டின் அருகே நேற்றிரவு சிறுத்தை ஒன்று நடமாடுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து குனியமுத்தூர் வந்த வனத்துறையினர் சிறுத்தையை தேடி பார்த்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் சிறுத்தை மாயமாகிவிட்டது.

இதனால் குனியமுத்தூர் பகுதி மக்கள் பீதியடைந்ததுடன், நேற்றிரவு தூக்கத்தையும் இழந்தனர். இரவு முழுவதும் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் உருட்டுக்கட்டைகளுடன் ஊரைச் சுற்றி ரோந்து வந்தனர்.
ஊருக்குள் சுற்றி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குனியமுத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தைப் பீதி காரணமாக குனியமுத்தூரில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications