'அம்மா'வுக்காக கோவில்களில் உருளும் அமைச்சர்கள் மக்கள் குறைகளையும் தீர்க்கட்டும்: ஸ்டாலின்
சென்னை: ஜெயலலிதாவுக்காக கோவில்களில் உருண்டு புரளும் அமைச்சர்கள் மக்களின் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் எம்.எல்.ஏ.வான திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதிக்கு சென்றார். தொகுதி மக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்கள் முதல்வரான ஜெயலலிதா அம்மையார் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் கோவில்களில் பால்குடம் தூக்குகிறார்கள், உருண்டு புரள்கிறார்கள், தீமிதிக்கிறார்கள். ஜெயலலிதாவுக்காக இத்தனையும் செய்யும் அமைச்சர்கள் மக்களின் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. என் தொகுதி மக்கள் அளிக்கும் மனுக்கள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications