அதிமுக அரசு குடிநீரை விற்பனை செய்வது சரியா? : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா இளைஞர் காங்கிரஸ் மாநாடு, குமரி தொகுதி மீட்பு மாநாடு ஆகியவை குழித்துறையில் நடைபெற்றது. தாலுகா தலைவர் அனிஷ் தலைமையில் நடந்த மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினால் வழக்கு போடுகிறார்கள். என் மீது மட்டும் 2 வழக்குகள் உள்ளன. மக்கள் பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் செய்கிறார்கள். ஆனால் இந்த போக்கு நீண்ட நாள் நீடிக்காது. மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்குவது மாநில அரசின் கடமை ஆகும். ஆனால் மாநில அரசு அந்த தண்ணீரை விற்பனை செய்வது சரியா?
அனைத்து பிரச்சனைகளிலும் பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டேன் என்று கூறி முதல்வர் தனது பொறுப்புகளை தட்டிக்கழிக்கிறார். மதுரையில் அமையவிருக்கும் ரப்பர் தொழிற்சாலையை குமரி மாவட்டத்தில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவேன். லாலுவின் சிறைவாசத்தை பார்த்தாவது அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications