மதிமுகவில் களைகட்டும் கடிதப் போர்: 2016 சட்டசபை தேர்தலும் கூட்டணி குழப்பமும்...

Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்பிகளுக்கு அண்ணா எழுதிய கடிதம் பற்றி அறிவார்கள்... உடன்பிறப்புகளுக்கு முரசொலியில் கருணாநிதி எழுதிய கடிதமும் படித்திருப்பார்கள். ஆனால் 2016 சட்டசபை தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி அறிவிப்பு முன்னிட்டு எழுதப்பட்ட கடிதங்களும், அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்களும் தமிழக அரசியலில் பரபரப்புத் தீயை பற்ற வைற்றுள்ளது.

ஜெயிக்கிற கட்சியோடு கூட்டணி சேருவார் என்று எதிர்பார்த்தால் மக்கள் நல கூட்டியக்கத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்து விட்டாரே என்று வைகோவின் மீதான அதிருப்தியில் சில மாவட்ட செயலாளர்கள் திமுக அணிக்கு தாவி வருகின்றனர். சிலரோ அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கடந்த ஒருவார காலமாக கலகலத்து வருகிறது மதிமுகவின் கூடாரம். இது இன்று நேற்று அல்ல கோவில்பட்டி கூட்டத்தில் கூட்டணி பற்றி அறிவித்தபோதே மதிமுகவில் கலகக்குரல் தொடங்கிவிட்டது என்கின்றனர்.

சொன்னது என்ன?

சொன்னது என்ன?

கடந்த ஜூன் மாதம் முதல் தேதியில் கட்சியின் உயர்மட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பொதுச்செயலாளர் வைகோ, ‘வர இருக்கிற பொதுத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தேர்தலில் பொது எதிரியை வீழ்த்த வேண்டுமானால், அதற்கு பலமான கூட்டணி வேண்டும் என்று கூறினார். இது பெரும்பாலான மதிமுக நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால்தான் 15, 20 பேராவது எம்.எல்.ஏ. ஆக முடியும் என்று நினைத்திருந்த நிலையில், திடீரென மக்கள் நல கூட்டியக்கத்துடன் இணைந்துதான் தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்று வைகோ மாற்றி பேச ஆரம்பித்தது புகைச்சலை ஏற்படுத்திவிட்டது.

வைகோவிற்கு பகிரங்க கடிதம்

வைகோவிற்கு பகிரங்க கடிதம்

இந்த நிலையில், ம.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், " அன்பு சகோதரர் வைகோ அவர்களுக்கு கழகத்தின் தொண்டர்கள் சார்பாக எழுதப்படும் கடிதம் என்று தொடங்கி எழுதப்பட்டுள்ளது. ‘‘எம்.பி. தேர்தல் வரும்போது யாருடன் கூட்டு என்பதை சூசகமாகவோ, பகிரங்கமாகவோ அறிவிக்கும் நீங்கள் எம்.எல்.ஏ. தேர்தல் என்று வரும்போது நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பு, அவர்களின் மனநிலையைத் திட்டமிட்டு குழப்புகிறீர்கள்.

எம்.எல்.ஏ தேர்தலில் ஏன் குழப்பம்

எம்.எல்.ஏ தேர்தலில் ஏன் குழப்பம்

உங்களின் உண்மையான திட்டம்தான் என்ன? கட்சிக்காரர்களை, கடன்காரர்களாகவும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கும் உங்களின் உள்நோக்கத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள். உண்மையில் தி.மு.க-வுடன் கூட்டுச் சேரக் கூடாது என்ற கொள்கை இருந்திருந்தால் எம்.பி தேர்தலில் ஏன் கூட்டு சேர்ந்தீர்கள்? எதற்கு எம்.எல்.ஏ தேர்தல் வரும்போது மட்டும் குழப்பம் செய்கிறீர்கள்?

ஜெயலலிதா உடன் சந்திப்பு

ஜெயலலிதா உடன் சந்திப்பு

மதுவிலக்கு உங்களுடைய நியாயமான கொள்கை, இதற்காக மற்றவர்களைவிட நீங்கள் மிக அதிகமாக உழைத்தவர். இந்த உழைப்பின் தகுதியை மதித்துத்தான், பழைய மகாபலிபுரம் சாலையில் முன்கூட்டியே கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு போனில் தகவல் தந்து நீங்களும் சம்மதித்து நடைபயணத்தின்போது ஜெயலலிதா வழியில் தனது காரை நிறுத்திவிட்டு இறங்கிவந்து மரியாதை கொடுத்தார். அதைப் பயன்படுத்த எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை.

எல்லாம் நாடகமா?

எல்லாம் நாடகமா?

திருமண வீட்டில் ஸ்டாலினிடம் மனம் நெகிழப் பேசி பாசம் காட்டியதும், கருணாநிதி வீட்டுத் திருமணத்தில் ‘அடடா வைகோ எதையும் மறக்கவில்லை' என்று கருணாநிதியை நம்பவைத்து அவர் உங்கள் கையைப் பிடித்து பாசம் காட்டியதும் கண்ணீர் உதிர நீங்கள் பேசியதெல்லாம் நன்றியா? நாடகமா?

திராவிய இயக்க துரோக சிந்தனை

திராவிய இயக்க துரோக சிந்தனை

நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்பதில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு. அதற்காக கட்சியில் பலம் இருக்கிறதா? பணம் இருக்கிறதா? கிளைகள்தான் உள்ளனவா? எட்டு மாதங்களுக்கு அவர்கள் வண்டியை உருட்டிட உங்களை அவர்கள் சக்கரமாகப் பயன்படுத்துகிறார்கள். ஸ்டாலின் முதல்வராக நான் உழைக்க வேண்டுமா என்று பயிற்சி பாசறைகளில் பகிரங்கமாகப் பேசுகிறீர்களே? இது அப்பட்டமான திராவிட இயக்கத் துரோக சிந்தனைதானே? ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் இப்படி தவறான முடிவெடுக்கும் தலைவரிடம் சிக்கிவிட்டோம் என்று புலம்பித் தீர்க்கின்றனர்.

நிலைப்பாடு என்ன?

நிலைப்பாடு என்ன?

உங்கள் காலத்துக்குப் பிறகு ம.தி.மு.க இருக்க வேண்டுமானால் சட்டமன்றத்துக்குள் கட்சி உறுப்பினர்கள் செல்வதற்குரிய கூட்டணியைப் பற்றி சிந்தியுங்கள். மூன்றாவது அணி, நான்காவது அணி தமிழ்நாட்டில் எடுபடாது. நீங்கள் மனித நேயம் மிக்கவர் என்பது உலகறியும். தமிழ் மக்களிடம் நீங்கள் பெற்றுள்ள நற்பெயர் ஒவ்வொருவரும் உணர்வார்கள். ஆனால், தற்போது உங்களுடைய நிலைப்பாடுகள் திராவிட இயக்க உணர்வே இல்லாததுபோல மாறிக்கொண்டிருக்கிறது என்று எழுதப்பட்டுள்ளது அந்த கடிதம்.

திவான் பதில் கடிதம்

திவான் பதில் கடிதம்

இந்த நிலையில், ம.தி.மு.க அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் நெல்லை செ.திவான், மிகப்பெரிய விளக்கக் கடிதம் ஒன்றை ம.தி.மு.க நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், 3.10.1993ம் நாளன்று மத்திய உளவுத் துறையால் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைக்கொண்ட ஒரு கடிதத்தை தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகனைக்கூட கலந்து பேசாமல் மருமகன் முரசொலி மாறனை மட்டும் அருகில் வைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டார் கலைஞர் கருணாநிதி. ‘உங்களை விடுதலைப் புலிகள் ஏன் கொல்ல வேண்டும்?' என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அதற்கான நோக்கம் அந்தக் கடிதத்திலேயே உள்ளது' என்று வைகோ மீது கலைஞர் பழிபோட்டார். வைகோவை அன்று தொண்டர்கள்தான் காத்தார்கள்.

தோல்வி ஏற்பட்டது ஏன்?

தோல்வி ஏற்பட்டது ஏன்?

96ம் ஆண்டு தேர்தலில் ம.தி.மு.க தோற்றது பற்றி அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மூப்பனார், நம்மோடு வராததாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆதரவு வேறு பக்கம் திரும்பியதாலும்தான் மக்கள், ம.திமு.க-வுக்கு வாக்களிக்கவில்லை.

பதவி ஆசையில்லை

பதவி ஆசையில்லை

98 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்து மூன்று பேர் எம்.பி ஆனார்கள். 99 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டுவைத்து நான்கு பேர் எம்.பி ஆனார்கள். மத்திய அமைச்சரவையில் வைகோவுக்கு அமைச்சர் பதவியைத் தர வாஜ்பாய் விரும்பினார். ஆனால் அவர், அமைச்சர் பொறுப்பை எடுத்துக்கொள்ளவில்லை.

அழகுபார்த்த வைகோ

அழகுபார்த்த வைகோ

99ம் ஆண்டும் மத்திய அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சர் பொறுப்பை வைகோ எடுத்துக்கொண்டு இருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் நடந்துகொள்ளவில்லை. கண்ணப்பனையும் செஞ்சி ராமச்சந்திரனையும் அமைச்சர்களாக்கி அழகுபார்த்தார் வைகோ.

தனித்து போட்டி

தனித்து போட்டி

2001 சட்டமன்றத் தேர்தலில் நாம் கேட்ட தொகுதிகளை தி.மு.க தரவில்லை. கேட்ட எண்ணிக்கையிலும் தரவில்லை. எனவே தனித்துப் போட்டியிட்டோம். வெற்றி வாய்ப்பை இழந்தோம். 2004 எம்.பி தேர்தலுக்கு முன்னால் வைகோ, பொடாவில் கைதாகி வேலூர் சிறையில் இருந்தார். முன்னணியினர்தான் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். நான்கு இடங்களை மட்டுமே பெற்றார்கள்.

நான்கு எம்.பி.க்கள்

நான்கு எம்.பி.க்கள்

தான் சிவகாசி தொகுதியில் நின்றால் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என்ற நிலை அப்போது இருந்தது. ஆனால் பதவிகளை விரும்பாத வைகோ என்ன செய்தார்? தனது மகனையோ, தம்பியையோ நிறுத்தாமல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை வேட்பாளர் ஆக்கினார். அந்தத் தேர்தலிலும் நான்கு பேர் எம்.பி ஆனார்கள்.

வாரியிறைத்த திமுக

வாரியிறைத்த திமுக

2006 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க காரணமானவர்கள் எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும்தானே! அவர்களே பின்னர் தி.மு.க-வுக்குச் சென்று அடைக்கலம் புகுந்ததை அனைவரும் அறிவோம். அந்தத் தேர்தலில் ம.தி.மு.க போட்டியிட்ட தொகுதிகள் அனைத்துக்கும் தி.மு.க தலைமை ஏராளமான தொகையை வாரி இறைத்தது. அதுதான் உண்மை. கட்சியின் உண்மையான தொண்டன் எழுதியிருந்தால் கட்சி சுடுகாட்டை நோக்கி சென்றுவிடுமோ என்று சந்தேகமாக உள்ளது என்று எழுதமாட்டார்கள் இதிலிருந்தே கடிதம் எழுதியவரின் துரோகப் பின்னணி தெரியவருகிறது.

கண்ணீரும் துன்பமும்

கண்ணீரும் துன்பமும்

‘என் பின்னால் வந்தால் கண்ணீரும் துன்பமும் தியாகமும் போராட்டமும்தான் வாழ்வாக அமையும். இதற்கு சித்தமானவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள். மற்றவர்கள் தள்ளி நில்லுங்கள்' என்று கடந்த 2004ம் ஆண்டு வைகோ பேசினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் வைகோ-வின் அபாரமான உழைப்பால் கழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

லட்சியப் பயணம்

லட்சியப் பயணம்

இந்த நிலையில் இப்படி ஒரு கடிதத்தைத் தயாரித்து மதிமுக தொண்டர்களுக்கு எழுதப்பட்டுள்ளது. இதேபோல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ஒரு கடிதத்தை அனுப்ப நயவஞ்சகக் கூட்டம் தயாராகிவிட்டது என்பதால், இந்தக் கடிதத்தைப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன். சிவப்பு-கறுப்பு-சிவப்பு வண்ணப் பதாகையைக் கையிலேந்திய வண்ணம் லட்சியப் பயணத்தைத் தொடர்வோம். முடிவு கட்ட வேண்டிய ஆதிக்கங்களுக்கு முடிவு கட்ட!" - என்று செ.திவான் கடிதம் எழுதியிருந்தார்.

திருப்பூரில் எதிரொலித்த வைகோ

திருப்பூரில் எதிரொலித்த வைகோ

திவானின் கடிதத்தை எதிரொலிக்கும் விதமாகவே திருப்பூர் மாநாட்டில் தொண்டர்களிடம் பேசினார் வைகோ. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே கடிதப் போர் தொடங்கிவிட்டது. சிலபல தலைகளும் தாவி வருகின்றனர். 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பு இன்னும் எத்தனை கடிதங்களைப் பார்க்கப் போகின்றனரோ மதிமுக தொண்டர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+