தென்தமிழகத்தில் மழை... சென்னையில் மேகமூட்டம் - வானிலை மையம்
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்த நிலையில் தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வட தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே காணப்படும்; சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் தொடங்கியது. ஆரம்பத்தில் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது.
ஓகி புயல் தாக்கத்தினால் நவம்பர் இறுதியில் தென் தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்தது. குமரி, நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வழிகின்றன. அடுத்த உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்திற்கு மழையை தரவில்லை.
இந்த நிலையில் தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், ஆனால் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications