திருமண மண்டபம் விளையாட்டு மைதானங்களில் இனி மது அருந்த அரசு அனுமதியும்.. அமைச்சர் விளக்கமும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சக செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார். எனினும் திருமண மண்டபங்களில் இனி மது அருந்த அரசு அனுமதியில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம்.

Liquor can be served in marriage halls with license, says Tamilnadu government

மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம். சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி இருந்தது. F.L.12 என்ற லைசன்ஸுக்கான கட்டணம் அரசிதழில் இடம்பெற்றுள்ளது.

மது அருந்துவது என்பது பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே அனுமதியுடன் இயங்கி வந்தது. பிற பொது இடங்களில் மதுபானங்களை குடிக்க தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பல இடங்களில் திருமண மண்டபங்களில் bachelors party என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக மது விருந்து வைக்கப்பட்டு வருகிறது.

Liquor can be served in marriage halls with license, says Tamilnadu government

இதை முறைப்படுத்த கோரிக்கைகள் எழுந்தன. அது போல் காலி இடங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் பலர் கூட்டமாக அமர்ந்து கொண்டு மது அருந்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஒரு நாள் நடத்தும் விழாவாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற்று சிறப்பு கட்டணம் செலுத்தி மது விருந்து அளிக்கலாம்.

Liquor can be served in marriage halls with license, says Tamilnadu government

இந்த நிலையில் தமிழக அரசின் புதிய மதுபான சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருமண மண்டபங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுவர், அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் விழாவில் மதுவிருந்து அளிக்கப்பட்டால் அது எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணத்தை கொடுக்கும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மேலும் இந்த புதிய சட்டத்தை சமூகவலைதளங்களில் மக்களை தேடி மதுபானம் என கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த சட்டத்திற்கு அதிக அளவு கண்டனங்களும் எதிர்ப்புகளும் குவிந்து வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் திருமண மண்டபங்களில் மதுஅருந்த அனுமதியில்லை என குறிப்பிட்டுள்ளார். திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தலாம் என தமிழக அரசு அரசிதழை வெளியிட்டுள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம் குழப்பத்தை அளிப்பதாக சமூகஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+