ஜனவரி 13 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ராமநாதபுரம்: 2025 ஜனவரி 13 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திரு உத்திரகோசமங்கை கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஜனவரி 13ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ஆலயத்தில் மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. ஒரே கல்லில் ஆன மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் தனிச்சிறப்பு பெற்றது. ஏராளமான மக்கல் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மூலவர் பச்சை மரகத நடராஜர் சிலை என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பால் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இங்கு குடி கொண்டிருக்கும் மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும். அந்த ஒரு நாள் தான் அந்த சன்னதி விழாகோலம் பூண்டிருக்கும்.
இந்நிலையில், வரும் 2025 ஜனவரி 13 ஆம் நாள் திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 2025 ஜனவரி 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 25 (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications