‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: ‛‛நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணத்தை கொடு. மற்றபடி பணத்தை வேஸ்ட் செய்யாத' என செயல்வீரர்கள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியின் அதிமுக வேட்பாளர் குமரகுரு பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் கடந்த முறை அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை திமுகவில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Lok Sabha Election 2024 Kallakurichi AIADMK candidate Kumaraguru s says give money only who votes for Double leaf symbol

திமுக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளராக மலையரசன் போட்டியிடுகிறார். இங்கு அதிமுக சார்பில் ஆர் குமரகுரு, பாஜகவின் பாமக கூட்டணி சார்பில் தேவதாஸ் உடையார், நாம் தமிழர் சார்பில் ஜெகதீச பாண்டியன் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியில் வெற்றி பெறும் முனைப்பில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுரு பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியது தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. அதாவது செயல்வீரர்கள் கூட்டத்தில் குமரகுரு, ‛‛இதுதான் கான்செப்ட்.. வேற யாரையும் கேட்காத..

பணம் எல்லாருக்கும் கொடுக்காத. யாரு ஓட்டு போடுறாங்களோ அவங்களுக்கு மட்டும் கொடு. வேறு யாருக்கும் பணம் கொடுக்காதே. எதுக்கு வேஸ்ட் செய்யனும்?. வராதவங்கள விட்டுட்டு போங்க.. இதுதான் உலகம். அவங்க நாலனா கொடுக்காங்களா.. நீ எட்டனா கொடு.. இரண்டனா கொடுத்தா, நாலனா கொடு.. தூக்கிப்போடு.. முடிஞ்சிப்போச்சு'' என பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இப்படி சர்ச்சைக்குள்ளாகி உள்ள குமரகுரு அரசியலுக்கு ஒன்றும் புதிதானவர் அல்ல. இவர் 21 வயது முதலே அதிமுகவில் செயல்பட்டு வருகிறார். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.

அதோடு குமரகுரு இதற்கு முன்பு 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர். 2006ல் திருநாவலூர், 2011, 2016ல் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவாக இருந்தார். மேலும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழ உறுப்பினராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+