தூரத்தில் கேட்ட அந்த சத்தம்.. உதயநிதியை விமர்சிக்காமல் மைக்கை ஆஃப் செய்த டிடிவி தினகரன்! என்னாச்சு?
தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாணடியன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார். உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்தபோது தூரத்தில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு டிடிவி தினகரன் கேட்டதும், அப்படியே மைக்கை ஆப் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி இடையே போட்டி உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில 12 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைக்கட்டி உள்ளது. கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தங்களின் விருப்பமான வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி தொகுதியை பொறுத்தமட்டில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் களமிறங்கி உள்ளார். நாம் தமிழர் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார்.
37 + 1 + 1.. தமிழகத்தில் திமுக கூட்டணி ‛டாப்’.. அப்போ அதிமுக + பாஜக? வெளியான ராஜநாயகம் டீம் சர்வே
இந்நிலையில் தான் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தென்காசி தொகுதியில் பிரசாரம் செய்தார். திறந்த வாகனத்தில் ஜான் பாண்டியனுடன் பயணித்து டிடிவி தினகரன் பேசி ‛தாமரை’சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இந்த சமயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதிமுக 7, பாஜக 4 இடங்களில் வெல்லும்.. இது நடந்தால் திமுக கூட்டணிக்கு சிக்கல்! ராஜநாயகம் டீம் கணிப்பு
பிரசாரத்தில் டிடிவி தினகரன், ‛‛ஸ்டாலின் ஓட்டு கேட்க வந்தாரா? அவரது பையன் விளையாட்டு அமைச்சர் (உதயநிதி ஸ்டாலின்) வந்தாரா?’’ என கேள்வி கேட்டார். அதற்கு தொண்டர்கள் ‛‛இல்லை.. இல்லை..’’ என பதிலளித்தனர். இதையடுத்து டிடிவி தினகரன், ‛‛அரசியலுக்கு வந்து உதயநிதி 6 மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் இந்திய பிரதமரை பார்த்து சவால் விடுக்கிறார். என்னங்க இது. கருணாநிதி பேரன் என்பதாலே எதை வேண்டுமானாலும் பேசுவீர்களா?’’ என கேட்டார்.
இந்த வேளையில் திடீரென்று தூரத்தில் இருந்து ஒரு சத்தம்கேட்டது. அதாவது பள்ளி வாசலில் தொழுகைக்கான சத்தம் கேட்டது. இதை கவனித்த டிடிவி தினகரன், சத்தம் வந்த திசையை நோக்கி கையை நீட்டி யோசித்தார். சில வினாடியில் பள்ளிவாசலில் தொழுகை சத்தம் என்பதை அறிந்த டிடிவி தினகரன் உடனடியாக தனது கையில் இருந்த மைக்கை ‛ஆப்’ செய்து பேசாமல் காத்திருந்தார். அதன்பிறகு தொழுகை சத்தம் நின்ற பிறகு மீண்டும் டிடிவி தினகரன் பிரசாரத்தை தொடங்கினார். இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications