Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்ஸ் உடன் செந்தில்பாலாஜி அன் கோ சந்திப்பு - தம்பித்துரை சமாதானம்

எம்எல்எக்கள் கூட்டத்தை கூட்டச் சொல்லியுள்ள எம்எல்ஏக்கள் 8 பேர் செங்கோட்டையனை சந்தித்தனர். அதே நேரத்தில் தம்பித்துரையும் முதல்வரை சந்தித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்திய செந்தில்பாலாஜி உள்ளிட்ட எட்டு எம்எல்ஏக்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து ஆலேசித்தனர். அதே நேரத்தில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரையும் முதல்வரை சந்தித்து ஆலோசித்தார்.

மாஜி அமைச்சர்கள் தோப்பு வெங்கடாச்சலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் இப்போது எம்எல்ஏக்களாக உள்ளனர். இவர்கள்தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை மனதில் வைத்து தொகுதி மக்கள் பிரச்னையை எழுப்பி வருகின்றனர்.

Loksabha deputy speaker Thambidurai met 8 MLAs who are asking to convene the assembly to convince them.

தோப்பு வெங்கடாசலம் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் கடந்த வாரத்தில் தனித்தனியாக ஆலேசானை கூட்டம் நடத்தினர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று 8 எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்திற்கு வந்தனர். 2 மணிநேரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.

சட்டசபையை கூட்டுவதற்கு முன்பாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், லோக்சபா துணை சபாநாயகர்
தம்பித்துரை எதிராகவே அரசியல் நடத்தி வருகிறார்.

எம்எல்ஏக்கள் 8 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த கையோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்தனர். அதே நேரத்தில் தலைமை செயலகம் வந்த தம்பித்துரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

தலைமை செயலகத்திற்கு எம்எல்ஏக்கள் வந்து திடீர் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+