லண்டன் மற்றும் கொழும்பு விமானங்களில் எஞ்சின் கோளாறு- அவதியடைந்த 300 பயணிகள்
சென்னை: எஞ்சின் கோளாறால் லண்டன் மற்றும் கொழும்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 300 பயணிகள் அவதிக்குள்ளாகினார்கள்.
சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.

அதில் 234 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது எஞ்சினை இயக்கிய போது அதில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டு பிடித்தார்.
உடனே விமான நிலையத்தில் இருந்த எஞ்சினியர்கள் வரவழைக்கப்பட்டு கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் சரி செய்ய முடியவில்லை. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் இருந்த 234 பயணிகளையும் விமானத்தில் இருந்து இறக்கி அருகில் இருந்த ஹோட்டலில் தங்க வைத்தனர்.
இதே போல் சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 9.25 மணிக்கு புறப்பட தாயராக இருந்தது.
இதில் 90 பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது விமானத்தை இயக்கும் போது கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் கீழே இறக்கி விமான நிலையத்தில் அமர வைத்தனர்.
பின்னர் இன்று அதிகாலை விமானம் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து அதிகாலை 5.10 மணிக்கு விமானம் கொழும்பு புறப்பட்டுச் சென்றது.
2 விமானங்களில் இருந்து 300 பயணிகள் விமான நிலையத்தில் கடும் அவதிப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications