சிலை கடத்தல்.. தொழிலதிபர் ரன்வீர்ஷா தோழி கிரண் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்
சென்னை: ரன்வீர்ஷா தோழி கிரண் ராவிற்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சிலை கடத்தல் தடுப்பு பிபிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் குழு, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரும் தொழிலதிபர்கள் சிக்கி வருகிறார்கள்.

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் அடிப்படையில், தொழிலதிபர் ரன்வீர்ஷா வீடு மற்றும் பண்ணை வீடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன.
இதையடுத்து தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் தோழி, கிரண் ராவ் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 23 பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கிரண் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் பிறப்பித்துள்ளது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை.
ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பி விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் ஏற்கனவே லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் தோழிக்கும் அதுபோன்ற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
