நெல்லையில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி
நெல்லை அருகே நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
நெல்லை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், சுற்றுலாப் பேருந்து ஒன்று சாலையோரம் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி பஸ்சின் மீது மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விபத்துக்குள்ளான பஸ் ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications