போக்குவரத்து துறையில் லஞ்சம்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் போர்க்கொடி
சென்னை: லாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறும் போக்குவரத்து துறையை கண்டித்தும், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனே நீக்கக் கோரியும் லாரி உரிமையாளர்கள் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல தீர்மானித்துள்ளனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் செந்தில் பாலாஜியின் வீடு முன்பு போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில்,
லாரிகளில் அளவுக்கு அதிகமாக பளு ஏற்றுவது நிறுத்தப்பட வேண்டும். அரசு சார்பில் லாரிகளில் அதிக பளு ஏற்ற தூண்டுகிறார்கள். பின்னர் அளவுக்கு அதிகமாக பளு ஏற்றப்பட்டுள்ளது என்று கூறி லாரிகளை மடக்கி பணம் வசூலிக்கிறார்கள். லாரி ஒன்றுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வசூல் செய்கிறார்கள். அந்த பணத்தை அளித்தால் லாரிகளில் எவ்வளவு பாரம் ஏற்றிக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்கிறார்கள்.
சாலை விபத்துகளை தடுக்கும் விதத்தில் வாகனங்களில் அதிக பளு ஏற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி அதிக பளு ஏற்றுவதற்கு எதிரான சட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனால் அரசு அதிகாரிகளே அந்த சட்டத்தை மீறுகிறார்கள்.
அதிக பளு ஏற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் லாரிகளை மடக்கி லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும், எங்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாத அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்ற வலியுறுத்தியும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல உள்ளோம் என்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications