For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகையில் கெத்து காட்டும் ஓபிஎஸ் அதிமுக... ஜெ.கூட்டம் போல் 'ஜேஜே' என திரண்ட பெண்கள்!!

நாகையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

நாகை: நாகையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, ஒபிஎஸ் தலைமையின் கீழ் இருக்கும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெறும் உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல் சென்னை ஆவடியி முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர் நாகை மாவட்டத்தின் சார்பில் நாகை பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

அலையாய் திரண்ட மக்கள்

அலையாய் திரண்ட மக்கள்

இதற்காக பேருந்து நிலையம் அருகே மிக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதிலிருந்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5000க்கும் அதிகமானோர் அங்கு திரண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெ.கூட்டத்தைப்போல் திரண்ட பெண்கள்

ஜெ.கூட்டத்தைப்போல் திரண்ட பெண்கள்

இந்த உண்ணாவிரதத்தில் அதிகளவு பெண்களே ஈடுபட்டுள்ளனர்.ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் போன்ற கூட்டங்களில் பெண்களே அதிகளவு பங்கேற்றிருப்பார்கள்.

மர்மம் என்ன? தடுத்தது யார்?

மர்மம் என்ன? தடுத்தது யார்?

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கோரும் போராட்டத்திலும் பெண்களே அதிகளவு பங்கேற்றுள்ளனர்."ஜெயலலிதாவின் சாவிற்கு நீதி விசாரனை வேண்டும்" தடுத்தது யார்? மர்மம் என்ன என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலை 10 மணிக்கே ஆர்வத்துடன் கூடிவிட்டனர்.

10 ஆயிரம் பேர் வருவார்கள்

10 ஆயிரம் பேர் வருவார்கள்

10 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயபால் தலைமையேற்றுள்ளார். முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

English summary
OPS team keeps hunger strike in Nagai. Lots women's has participated in this strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X