கழுத்தில் தழைய தழைய தாலி.. நாவற்பழம் சாப்பிட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய ஜோடி.. பரபர பின்னணி!

காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கோயிலுக்கு உள்ளே தாலியை கட்டி கொண்டு, வெளியே வந்து தூக்கு போட்டு தொங்கிவிட்டது ஒரு ஜோடி.. தற்கொலைக்கு முன்பு நாவற்பழமும், மரவள்ளிக்கிழங்கையும் சாப்பிட்டு, மிச்சமிருந்ததை கோயில் வாசலிலேயே வைத்துவிட்டு இறந்துள்ளனர்.. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.

சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி காட்டுக்கொட்டாய் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்த கூலி தொழிலாளி ஒருவரது மகள் கவிதா.. 20 வயதாகிறது.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சென்னிமலை அரசு காலேஜில் 3-ம் வருஷம் படித்து வந்தார். இவர் பாஸ்குமார் என்பவரை காதலித்தார்.

 lovers committed suicide near kallakurichi

இருவரும் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டனர்.. ஆனால் 2 பேரும் வேறு வேறு பிரிவை சேர்ந்தவர்கள்.. எப்படியும் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருந்தனர். அதையும் மீறி கல்யாணம் செய்ய நினைத்தபோதுதான், லாக்டவுன் வந்துவிட்டது.. இதனால் ஒருத்தருக்கொருத்தர் சந்தித்து கொள்ளவும் முடியவில்லை.. நேரில் சென்று பார்க்கவும் பஸ், ரயில் எதுவுமே இல்லை.. அதனால் செல்போனில் மட்டுமே பேசி வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் 2 பேருக்குமே ஏக்கம் வந்துவிட்டது.. எப்படியாவது பார்த்தே தீருவது என முடிவு செய்தனர்.. அதனால், பாஸ் குமார் நேற்று முன்தினம், வேலைக்கு போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, கவிதா ஊருக்கு வந்தார்.. அங்கு தயாராக காத்திருந்த கவிதாவை பைக்கில் உட்கார வைத்து கொண்டு, ஈரியூர் காட்டுப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்றார்.

அம்மன் கோயிலில் பாஸ் குமார் கவிதாவுக்கு தாலி கட்டினார். பிறகு 2 பேரும் கோயிலை விட்டு வெளியே வந்தனர்.. எப்படியும் வீட்டுக்கு போனால், யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள், அதனால் 2 பேரும் செத்து போயிடலாம் என்று முடிவு செய்தனர்.

அதன்படி, கையில் வைத்திருந்த பணத்தில் நாவல்பழமும், மரவள்ளிக் கிழங்கும் சாப்பிட்டனர்.. அதில் மிச்சமிருந்ததை கோயில் படிக்கட்டில் வைத்துவிட்டனர்.. கையில் இருந்த சில்லறை பணத்தையும் அங்கேயே வைத்துவிட்டனர்.. மறுபடியும் கோயிலுக்குள் சென்றனர்.. சிலைகளுக்கு சுற்றப்பட்டிருந்த துணிகளை எடுத்து வந்து, முடிச்சு போட்டு, அதே கோயிலுக்கு எதிரே இருந்த ஒரு கொட்டகையில் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்குப்போட்டு தொங்கி விட்டனர்.

நேற்று காலையில்தான் இவர்களது சடலத்தை அந்த பகுதி மக்கள் பார்த்து அலறினர்.. பிறகு போலீசாருக்கு விஷயத்தை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து 2 சடலங்களையும் மீட்டனர்.. மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது. 2 குடும்பத்தினரும் சடலங்களை கண்டு கதறியது காண்போரை கலங்க வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+