வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்திலன் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. திருச்சி, வேலூர் போன்ற மாவட்டங்களில் இது 107 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவை தொட்டது.
இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ளது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகு என்னபாடுபடுவமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் வருண பகவான் கருணை காட்டிவிட்டார்.
வங்கக்கடலில் குறைந்த காற்றவுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குழித்துறை, மார்த்தாண்டம், திருவட்டாறு உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கோவில்பட்டி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, சித்தன்னவாசல், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையும், ஒரு சில இடங்களில் கன மழையும் மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications