நகராமல் நிற்கும் தாழ்வு நிலை.. விடிய விடிய வெளுத்துக் கட்டிய மழை... பயத்தில் நடுங்கும் சென்னை!
சென்னை: சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் மீண்டும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மீண்டும் கன மழை பெய்து வருவதால் மறுபடியும் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சமே அது. நேற்று இரவு விடிய விடிய பல பகுதிகளில் பலத்த மழை பெய்து மக்களை மேலும் அச்சத்தில் மூழ்கடித்த்து.
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை உட்பட வடமாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்தது. சென்னையில் காலை 11 மணி வரை வெயில் தலை காட்டினாலும், அதன் பின்னர் நகரில் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.

இரவு 8 மணியளவில் எ்ழும்பூர், சிந்தாதிரிபேட்டை, புரசைவாக்கம், மூலக்கடை, பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், புழல் உட்பட நகரின் பெரும்பான்மையான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையுடன் காற்றும் பலமாக வீசியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. மாலை முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் நேற்று பெய்த மழையால் மேலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், அனாகாபுத்தூர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. அம்பத்தூர், பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல், கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது. இதேபோல் சென்னை புறநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது.
இதேபோல முகப்பேர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications