இடி இடிக்குது.. மழை கொட்டுது.. காணாமல் போன கத்திரி... புதுக்கோட்டையில் 2 பேர் பலி!
சென்னை: கொளுத்தும் கோடைக்கு இதமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை கொட்டி வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் மறைந்து குளுமை பரவியுள்ளது. புதுக்கோட்டை அருகே இடியோடு பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கில் சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை வெயில் வறுத்தெடுத்த நிலையில் சில மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அரைமணி நேரமாக கன மழை கொட்டியது. அபிராமம், பேரையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் மறைந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.
சென்னையில் நேற்று காலையில் சாரல் மழை பெய்த நிலையில் பிற்பகலில் மிதமான வெயிலோடு குளிர் காற்று வீசியது. இன்று காலை முதலே வெயில் அடித்த நிலையில் திடீரென கனமழை கொட்டியது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும் கோடை வெயிலுக்கு பெய்த மழை இதமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications