காற்றழுத்தம் தீவிரமடைகிறது: நாகை, சென்னை இடையே கரையைக் கடக்கும் - 15 முதல் கன மழை
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது வலுவடைந்து வருவதாகவும், இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி, சென்னை - நாகை இடையே கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோரத் தமிழகத்தில் நவம்பர் 15ம் தேதி முதல் 16ம் தேதி வரை கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று கூறுகையில்,
நேற்று தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
கடும் கொந்தளிப்புடன் கடல்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்கும்.
இதன் காரணமாக 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு முதல் 16-ந்தேதி வரை கன மழை பெய்யும். காற்றும் 60 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசும். கடல் கடும் கொந்தளிப்பாக இருக்கும்.
அதிக சேதம் ஏற்படும்
எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். தாழ்வு மண்டலம் வலுவாக இருப்பதால் அதிக சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்த வரை ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. குளச்சலில் 10 செ.மீ. மழையும், இரணியலில் 9 செ.மீ., தக்கலை 8 செ.மீ., கன்னியாகுமரி, கழுகுமலை 6 செ.மீ., திருச்செந்தூர், தூத்துக்குடி, குளித்துறை, சாத்தான்குளம் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
கடலூர் -புதுவை வழியாக
சென்னை - நாகை இடையே அனேகமாக கடலூர் - புதுச்சேரி வழியாக கரையை கடக்கும் என எதிர்பார்ப்பதால் அங்குள்ள மீனவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்படுகிறது என்றார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications