நேற்று காஞ்சிபுரம்: இன்று மீனம்பாக்கத்தில் ஜெயலலிதா பிரச்சாரம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று மீனம்பாக்கத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அவரது பிறந்தநாள் அன்று வெளியிட்டார்.

இதையடுத்து அவர் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து துவக்கினார். இதைத் தொடர்ந்து அவர் இன்று சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் அருகே ஜெயலலிதாவுக்கு 100 அடி உயர கட் அவுட்டும், மேடைக்கு எதிரே நாடாளுமன்ற வடிவில் பிரமாண்ட கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளன.
மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஜெயின் கல்லூரி வரை அதிமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதோடு பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஜெயலலிதா ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான ராமசந்திரனை ஆதரித்து பேசுகிறார்.
ஜெயலலிதா வருகையையொட்டி மீனம்பாக்கத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications