லோக்சபா தேர்தல்- பிப்ரவரி 9ம் தேதி முதல் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல்

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. வினருக்கு கடந்த மாதம் 23-ந் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கப்பட்டது.
பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தப்பட்டது. இந்த விருப்ப மனு கொடுக்க கடைசி தேதி தேதி பிப்ரவரி 1-ந் தேதி என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 9-ந் தேதி வரை விருப்ப மனு கொடுக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்காக தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் 9.2.2014 முதல் 12.2.2014 வரை காலை 10 மணியளவில் விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.
எனவே விருப்ப மனு கொடுத்தவர்கள் தங்கள் தொகுதிக்கான தேதியில் நேரில் வர வேண்டும். வரும்பொழுது கட்சி உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், தனித் தொகுதிக்கு ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
கீழ்க்கண்ட தேதி மற்றும் தொகுதி வாரியாக நேர்காணல் நடைபெறும்.
பிப்ரவரி 9-ந் தேதி: தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை
பிப்ரவரி 10-ந் தேதி: நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர்,சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்
பிப்ரவரி 11-ந் தேதி: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை
பிப்ரவரி 12-ந் தேதி: வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications