For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40 தொகுதிகளிலும் 60 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகும்... மக்கள் உரிமை இயக்கம் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் சுமார் 60 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகும் என தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

16வது லோக்சபா தேர்தலில் நோட்டா என்ற புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப் படுத்துகிறது. அதாவது எந்தவொரு வேட்பாளருக்கும் தங்களுடைய வாக்கை அளிக்க விரும்பாத மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நோட்டோ குறித்து தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சாரம் குறித்து அவ்இயக்கத்தின் மாநிலத் தலைவர் பூமொழி கூறியதாவது :-

விழிப்புணார்வு பிரச்சாரம்...

விழிப்புணார்வு பிரச்சாரம்...

நோட்டா குறித்து பொதுமக்களிடம் இந்திய தேர்தல் ஆணையம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இக்குறையை போக்கும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைந் துள்ள 40 மக்களவைத் தொகுதிகளி லும் நோட்டா விழிப்புணர்வு பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்கினோம்.

ஏப்.12 நிறைவு....

ஏப்.12 நிறைவு....

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 37 தொகுதிகளில் எங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்திருக்கிறோம். ஏப்ரல் 12-ம் தேதி சென்னையில் உள்ள மாநில தலைமைத் தேர்தல் அலுவலகம் முன்பு எங்கள் பிர்சசாரத்தை நிறைவு செய்ய இருக்கிறோம்.

60 லட்சம் நோட்டா வாக்குகள்...

60 லட்சம் நோட்டா வாக்குகள்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 60 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நோட்டா வாக்குகள் அதிகமாக பதிவாகும் பட்சத்தில், வரும் காலங்களில் அரசியல் கட்சியினர் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

எங்கள் நோக்கம்...

எங்கள் நோக்கம்...

எங்கள் நோக்கம் 100 சதவீதம் வாக்கு பதிவாக வேண்டும் என்பதே.

மாணவர்கள், முதியவர்கள்...

மாணவர்கள், முதியவர்கள்...

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் எங்கள் இயக்க உறுப்பினர்கள், பயணிகள் கல்லூரி மாணவிகள் எழுத படிக்கத் தெரியாத முதியோர்கள் ஆகியோரிடம் நோட்டா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்டப்படி எதிர்ப்பு....

சட்டப்படி எதிர்ப்பு....

ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரத்தில் ‘காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்சினைகள், மாணவ சமுதாயத்துக்கு எதிராக வியாபாரமாக்கப்பட்ட கல்வி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வெறுப்படைந்துள்ள வாக்காளர்கள் தங்களின் எதிர்ப்பை சட்டப்படி பதிவு செய்ய நோட்டாவை பயன்படுத்த வேண் டும் என அவர்கள், பிரச்சாரம் மேற்கொண்டனர்.

English summary
The People Rights Movement says that nearly 60 lakhs NOTA votes will be hold in Tamilnadu and Puthuvai in the Lok Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X