நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் ஜெயலலிதா: அதிமுகவினர் 19ம் தேதி விருப்ப மனு அளிக்கலாம்!

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்தில் வருகிற 19.12.2013 வியாழக்கிழமை முதல் 27.12.2013 வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
ரூ 25 ஆயிரம் கட்டணம்
இதனிடையே அ.தி. மு.க. பொருளாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு இணங்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்தில் வருகிற 19.12.2013 முதல் 27.12.2013 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விண்ணப்பக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி வேட்புமனு மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications