இந்தியாவில் தோன்றிய அபூர்வ முழு சந்திர கிரகணம்.. மொட்டைமாடிகளில் நின்று ரசித்த மக்கள்!
இந்தியாவில் தோன்றிய அபூர்வ சந்திர கிரகணத்தை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
சென்னை: இந்தியாவில் தோன்றிய அபூர்வ சந்திர கிரகணத்தை மொட்டைமாடிகளில் நின்று மக்கள் ரசித்து வருகின்றனர்.
152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் இன்று அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியுள்ளது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.
மூன்று அரிய நிகழ்வுகள்
சந்திர கிரகணம், சூப்பர் நிலா, சிவப்பு நிலா என்ற மூன்று அரிய நிகழ்வுகளுடன் இந்த அபூர்வ சந்திர கிரகணம் நடைபெறுகிறது. மாலை 5.18 மணி முதல் 6.21 மணி வரை இந்த சந்திர கிரகணம் நடைபெறும்.

பெரிய பிரகாசமான நிலா
இன்று சூப்பர் மூன் என்பதால் வழக்கமான பவுர்ணமி நாட்களை விட இன்று நிலவு 14 சதவீதம் பெரியதாக தோன்றும். அதேபோல் வழக்கத்தை விட 30 சதவீதம் பிரகாசமாகவும் நிலவு காட்சியளிக்கும்.

கடல் அலை..
இந்த சந்திர கிரகணம் ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு மாநிலங்களில் மாலை 6.21 மணி முதல் 7.37 வரை பார்க்கலாம். சந்திர கிரகணத்தை முன்னிட்டு கடலில் அலையின் வேகம் வழக்கத்தை விட பெரியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் 2 பவுர்ணமி
நீல நிலா என்பது ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வருவதாகும். கடந்த ஒன்றாம் தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில் ஜனவரி மாதத்தில் இன்று மீண்டும் பவுர்ணமி வந்துள்ளது.

இனி 2028ல் தான்..
சந்திர கிரகணத்தை காண சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் திரண்டுள்ளனர். இதுபோன்று ஒரு சந்திர கிரகணத்தை இனி 2028ஆம் ஆண்டில் தான் மீண்டும் காணமுடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications