சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் நடை மூடல்- கட்டண சேவைகள் ரத்து
சென்னை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைமூடப்பட்டுள்ளது. சுமார் 11 மணி நேரம் வரை சாத்தப்படுவதை முன்னிட்டு கோவிலில் வழக்கமாக நடைபெறும் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் ரூ. 300, ரூ. 50 தரிசன டிக்கெட் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது.
இன்று சந்திர கிரகணம் மதியம் 3.45 மணி முதல் தொடங்கி இரவு 7.15 வரை நிகழ்கிறது. இதனையொட்டி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களும் மூடப் படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயில், 6 மணி நேரம் முன்னதாகவே, அதாவது காலை 9 மணி முதலே மூடப்பட்டது. பின்னர் இரவு 8.30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, நடை சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

வசந்த உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று சந்திர கிரணகத்தால் வசந்த உற்சவம் அதிகாலை 5 மணிக்கே தொடங்கப்பட்டது.

உற்சவர்கள் ஊர்வலம்
உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி, சத்தியபாமா, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி ஆகியோர் மூன்று வாகனங்களில் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்குமாட வீதிகளில் ஊர்வலமாக வசந்த மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டது.

நடை மூடல்
அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் உற்சவர்கள் கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டன. பின்னர் காலை 9 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது. மதியம் 3.45 முதல் இரவு 7.15 வரை சந்திர கிரகணம் நீடிப்பதால் கோவில் நடை 9.30 மணிக்கு மூடப்பட்டது. இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

பரிகார பூஜைகள்
இதையடுத்து கோவில் தூய்மை படுத்தப்பட்டு பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவிலில் வழக்கமாக நடைபெறும் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் ரூ. 300, ரூ. 50 தரிசன டிக்கெட் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது. இன்று இரவு நடைபெறும் பவுர்ணமி கருட சேவை நிகழ்ச்சியையும் தேவஸ்தானம் ரத்து செய்து உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications