விவசாயிகளின் கிழிந்த வேட்டியை பறிக்கப் பார்க்கிறது மத்திய அரசு... வைரமுத்து கண்டனம்!
காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்.
சென்னை : உச்சநீதிமன்ற தீர்ப்பே தமிழக உழவர்களின் வேட்டியை கிழித்துவிட்டதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து வெளியிட்டுள்ள கருத்தில் கூறியுள்ளதாவது : உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது.

உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் என்று தனது ஆதங்கத்தை வைரமுத்து வெளிப்படுத்தியுள்ளார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது கோபத்தை கவிதையாக வெளிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications