பரபரப்பான அரசியல் சூழ்நிலையிலும், லண்டனில் குடும்பத்தோடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் அழகிரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார். அவர் இன்னும் 3 நாட்கள் கழித்துதான் தமிழகம் பக்கம் திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோர் திருமண நாளை ஒட்டி ஆசி பெறுவதற்காக மதுரையில் இருந்து கடந்த 15ம் தேதி அழகிரி குடும்பத்தினருடன் சென்னை வந்தார். சென்னையில் தனது தாயார் தயாளு அம்மாளை மட்டும் நேரில் சந்தித்து ஆசிபெற்ற அவர், கருணாநிதியை சந்திக்கவில்லை.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அழகிரி, இரு மாதங்களில் நல்ல செய்தியைத் தன்னிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

இந்நிலையில், 17ம்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அழகிரி லண்டனுக்கு புறப்பட்டார். அழகிரி மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மருமகள் ஆகியோர் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றனர்.

வரும் 24ஆம் தேதி அவர்கள் சென்னைத் திரும்புவார்கள் எனத் தெரிகிறது. அவர் ஓய்வுக்காக லண்டன் செல்வதாக ஆதரவாளர்கள் வட்டத்தில் கூறப்படுகிறது.

#selfie with Appa in the London eye ! #londoneye #appa #londoncity

A photo posted by DNA (@alagiridhaya) on

இதனிடையே, அழகிரியின் மகன் தயா அழகிரி, லண்டனில் தனது தந்தையோடு எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+