ஸ்ரீரங்கம் வரும் மு.க.ஸ்டாலின்.. நாளை முதல் 3 நாட்கள் பிரசாரம்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் நாளை தொடங்குகிறது. 3 நாட்களுக்கு ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் என். ஆனந்த் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவருக்காக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான குழு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆனந்த்துக்கு வாக்கு சேகரிக்க 3 நாள் பிரசாரத்தில் குதிக்கிறார்.

நாளை தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார் ஸ்டாலின்.
நாளை 9ம் தேதி மாலை 4.15 மணிக்கு சோமரசம்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அதவத்தூர் மெயின்ரோடு, அல்லித்துறை அண்ணாசிலை, தீரன்நகர், புங்கனூர், ராம்ஜிநகர், மில்கேட், கள்ளிக்குடி, சோழன்நகர், நவலூர்குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, இனாம் குளத்தூர், ஆலம்பட்டி புதூர், மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாநத்தம், வடக்கு சேர்பட்டி, கொட்டப்பட்டி, கரும்பிலிப்பட்டி, கொத்த மேட்டுபட்டி, முத்தப்புடையான்பட்டி, சமுத்திரம், மறவனூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர் இரவு 10 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இன்று அன்பழகன் பேச்சு
இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திருச்சி வந்துள்ளார். பெட்டவாய்த்தலையில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் அவர் பின்னர் ஸ்ரீரங்கத்தில் இரவு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து பேசுகிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications