விஜயபாஸ்கருக்கு மானமிருந்தால் மான நஷ்ட வழக்கு போடட்டும்... மு.க.ஸ்டாலின் சுளீர்
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மானமிருந்தால் மான நஷ்ட வழக்கு போடட்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
சென்னை: குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மானமிருந்தால் மான நஷ்ட வழக்கு போட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.
டெங்கு என்ற வைரஸ் காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இது பகலில் கடிக்கும் ஏடீஸ் எனப்படும் கொசுவினால் பரவுகிறது. டெங்குவை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொசு உருவாகும் வகையில் பொருள்களை சேமித்து வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவேம்பு கசாயம்
டெங்கு விழிப்புணர்வு பிரசார வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சென்னை பெரம்பூரில் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயத்தையும் அவர் வழங்கினார்.

சரியில்லாத சாலைகள்
பெரம்பூர் தொகுதியில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக இரு சக்கர வாகனத்தில் வீதி வீதியாக சென்றார். இதைத் தொடர்ந்து குப்பை கூளங்களா காட்சி அளிக்கும் குப்பை மேடுகளை ஜேசிபி கொண்டு சமன்படுத்த உத்தரவிட்டார்.

இன்று கூட கவிழலாம்
அப்போது ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், எடப்பாடி தலைமையிலான ஆட்சி இன்றோ, நாளையோ கவிழலாம். விஜயபாஸ்கர் குட்கா பாஸ்கராக மாறி டெங்கு பாஸ்கர் ஆகிவிட்டார். நயவஞ்சகத்தின் மறு உருவம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆவார்.

எனது பணியை செய்கிறேன்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பெயரில் அரசியல் பேசுவது கண்டனத்துக்குரியது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது பணியை நான் செய்து வருகிறேன். குட்கா விவகாரத்தில் மானநஷ்ட வழக்கு போடாதது ஏன்?. அவருக்கு மானமிருந்தால் என் மீது வழக்கு போட வேண்டும் என்றார்.

தமிழிசைக்கு அறிவுரை
தூய்மை இந்தியா திட்டம் போன்ற ஒரு திட்டத்தை 1996-இல் நான் சென்னை மேயராக இருந்த போதே சிங்கார சென்னை என இத்திட்டத்தை செயல்படுத்தினேன். குற்றசாட்டு கூறுவதற்கு முன் பாஜக மாநில தலைவர் தமிழசை சவுந்தரராஜன் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications