சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. எழுப்பும் பிரச்சினைகள் என்னென்ன?... மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை : தமிழக சட்டமன்றம் வரும் 24 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டத் தொடரில் தி.மு.க. சார்பில் எழுப்பப்படும் பிரச்சினைகள் குறித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.
சென்னையில் இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது...

கேள்வி : பட்ஜெட் கூட்டத்தொடர் நீண்ட நாட்களுக்கு பிறகு கூட்டப்படுகிறதே?
ஸ்டாலின் : பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு அதாவது நீண்ட நாட்கள் என்று சொல்வதை விட நீண்ட மாதங்களுக்கு பிறகு, சட்டமன்றம் வருகிற 24-ஆம் தேதி கூட இருப்பதாக செய்திகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கோரிக்கையை தி.மு.க. மட்டுமல்ல, எல்லாக் கட்சியினுடைய தலைவர்களும், இதை தொடர்ந்து வலியுறுத்தி, வற்புறுத்தி சட்டமன்ற கூட்டத்தை கூட்டிட வேண்டுமென்ற கோரிக்கை இப்போது நிறைவேற்றப்படக் கூடிய வகையில் 24-ஆம் தேதி கூடியிருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் வருகிற 15-ஆம் தேதி சுதந்திர நாள். முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சுதந்திர நாளையொட்டி ஏற்கெனவே, தலைவர் கலைஞர் அவர்கள், மாநிலத்தினுடைய முதலமைச்சர்கள் கொடியேற்றுகிற உரிமையை பெற்றுத் தந்தவர். அந்த உரிமையை தலைவர் கலைஞர் அவர்கள் பெற்றுத் தந்திருக்கிறார் என்ற அந்த உணர்வோடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொடியை உயர்த்தி வைக்க இருக்கிறார்கள்.
அந்த கொடியை உயர்த்தி வைத்து விட்டு அங்கே அவர் உரையாற்றப் போகிறார். உரையாற்றுகிற போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டிய அறிவிப்புக்களை சுதந்திர நாளிலே அறிவித்து விடுவாரோ என்று ஒரு சந்தேகம் இப்போது வந்திருக்கிறது. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கேள்வி : நீங்கள் என்ன பிரச்சனைகளை எழுப்ப உள்ளீர்கள்?
ஸ்டாலின் : பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. தொடர்ந்து நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பது முக்கியமாக மது விலக்கு கொள்கை. மது விலக்கை அமல்படுத்த வேண்டும். அதற்காக உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி அது குறித்து விவாதிக்க வேண்டுமென்று பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம்.
அந்த பிரச்சனை இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் அவர்கள் தாக்கப்பட்டு அவர்கள் மீது பொய் வழக்குகளெல்லாம் போடப்பட்டு ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் அந்தப் பிரச்சனை, மேகதாது பிரச்சனை, சட்டம் ஒழுங்கு ஒரு மோசமான நிலையில் இருக்ககூடிய இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை அவையிலே பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் சபாநாயகரோ அல்லது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களோ அதற்குரிய வாய்ப்பை வழங்குவார்களா என்பது ஒரு கேள்வி குறிதான் என்பது மறுக்க முடியாது.
கேள்வி : சட்டசபை நேரடி ஒளிபரப்பு பற்றி உங்கள் கருத்து?
ஸ்டாலின் : ஏற்கெனவே இந்த பிரச்சனை பற்றி நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வழக்கு நீதிமன்றத்திலே இருந்தாலும் அரசு தரப்பின் சார்பிலே அதற்குரிய நிதி இல்லையென்று ஒரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது நியாயமானதாக இல்லை என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
கேள்வி : தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு என்ன செய்வீர்கள்?
ஸ்டாலின் : தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. என்னென்ன செய்ய தவறி யிருக்கிறதோ அதையெல்லாம் நிச்சயமாக தி.மு.க. செய்யும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications