கட்சிப் பணியை செம்மைப்படுத்த ஸ்டாலின் ஆய்வு... பிப்ரவரி 1 முதல் சென்னையில் நடக்கிறது!
கட்சிப் பணிகளை செம்மைப்படுத்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை சென்னை கலைஞர் அரங்கில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கட்சிப் பணிகளை செம்மைப்படுத்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை சென்னை கலைஞர் அரங்கில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கட்சிப் பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவ்வட் செயலாளர் வரையுள்ள நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களையும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.

கட்சிப் பணிகளை செம்மைப்படுத்த நடைபெறும் இந்தக் கூட்டம் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 மற்றும் 3ம் தேதிகளில் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட பிரதிநிதிகளுடனும், பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட பிரதிநிதிகளையும் ஸ்டாலின் சந்திக்கிறார். இதே பன்ற பிப்ரவரி 9, 10, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி மாவட்ட நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து பிப்ரவரி 14, 15, 16ம் தேதிகளில் பெரம்பலூர், அரியலூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவ்வட் நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 4 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு பிப்ரவரி 21, 22, 23 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர், நாகை, மதுரை மாவட்ட திமுகவினரையும், 27, 28ம் தேதிகளில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.
மார்ச் மாதம் 2ம் தேதி, தொடங்கி 3, 5,7,9 ஆகிய தேதிகிளில் கலைஞர் அரங்கில்தேனி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்தும் ஆலோசனையை ஸ்டாலின் நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து 10ம் தேதி முதல் 22ம் தேதி வரை திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலுர், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திப்பார் என்று அன்பழகன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications