தமிழகத்தில் நிர்வாகம் முடங்கி போய் விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கி போயுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் முடங்கிப் போய்விட்டதாக கூறினார்.
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் இது மிகப் பெரிய திருப்பம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் நேற்று ஆளுநரை சந்தித்தனர். இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஜெயலிலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் எந்த அரசு நிர்வாக பணிகளும் நடைபெறவில்லை. பின்னர் ஓ.பி.எஸ். முதல்வராக பொறுப்பேற்ற பின்னரும் நிர்வாகம் முடங்கியே இருந்தது.
தொடர்ந்து தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் அரசு நிர்வாகம் செயல்படவில்லை. தற்போது அதிமுகவில் யார் முதல்வர் என்ற மல்லுக்கட்டு நடந்து வருகிறது. இதை எல்லாம் சுட்டி காட்டி அரசியல் சாசன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினேன் என்றார்.
-
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications