வைகோ தாயார் மறைவு: ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருமாவளவன் நேரில் அஞ்சலி
திருநெல்வேலி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கலிங்கப்பட்டிக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 97 வயது தாயார் மாரியம்மாள் வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் வைகோவின் தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அஞ்சலி
வைகோவின் தாயாரின் உடலுக்கு இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அஞ்சலி செலுத்தினார்.

ஸ்டாலின் அஞ்சலி
அவரைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வைகோவின் தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எனது திருமணம் முடிந்து ஆசி பெற வந்தபோது வைகோ தாயார் அன்புடன் வரவேற்றார். உணவு சமைத்து அன்புடன் பரிமாறினார். அன்புடனும், பாசத்துடனும் பழகும் குணத்தை உடையவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.

முத்தரசன், திருமாவளவன் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வைகோவின் தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கலிங்கப்பட்டிக்கு வந்து மாரியம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜி. ராமகிருஷ்ணன், அற்புதம்மாள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோரும் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கு
மாரியம்மாளின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்ற பின்னர் இன்னும் சற்று நேரத்தில் கலிங்கப்பட்டியில் உள்ள மயானத்தில் நல் அடக்கம் நடைபெற உள்ளது. இதில் உள்ளூர் பிரமுகர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications