உண்மைதான், கூட்டுத் சதியாலும் விதியாலும்தான் வீழ்ந்தார் ஜெயலலிதா.. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
திருச்சி: சதியின் காரணமாகவும், விதியன் காரணமாகவும் பதவி இழந்தேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அது உண்மைதான். உடன் பிறவா சகோதரி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன் ஒன்றாக கூட்டு சதி செய்து சொத்து சேர்த்தார். சதி செய்த சேர்த்து சொத்துக்கு பெங்களூர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்புதான் விதி. இதைத்தான் ஜெயலலிதா சதியும், விதியும் என்று பேசி வருகிறார் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு ஆதரவாக கம்பரசம்பேட்டை பகுதியில் நேற்று பிரசாரம் செய்து பேசினார் ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது:

ஸ்ரீரங்கத்தில் 13ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல் எந்த சூழலில், எந்த காரணத்தினால் வந்தது என்பதை ஓரளவிற்கு நீங்கள் புரிந்து வைத்துள்ளீர்கள். சுருக்கமாக கூறவேண்டுமானால், நியாயமாக, சாதாரணமாக இடைத்தேர்தல் எந்த சூழலில் வரும் என்றால் எம்எல்ஏ, எம்பி, கவுன்சிலர் மற்றும் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவி காலம் முடியும் முன்னர் நோய்வாய்ப்பட்டு இறந்தால் அதற்கு தேர்தல் நடத்தப்படும். துரதிஷ்டமாக தற்போது ஸ்ரீரங்கத்திற்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
ஊழல் வழக்கில் சிக்கி 19 ஆண்டாக நடந்து வந்த வழக்கிற்கு தீர்வு காணப்பட்டு, 4 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலில் நிற்க தகுதி இழந்தார். அதனால் இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த 91 முதல் 96ம் ஆண்டு வரை முதல்வர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்தார். அந்த சொத்து குவிப்பு வழக்கு சென்னை நீதிமன்றம், தனி நீதிமன்றம், பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் 4 ஆண்டு சிறை பெற்றவர் ஜெயலலிதா. முதல்வர் பொறுப்பு வகித்த போது அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. நமது தமிழகத்தில் தான் நடந்தது.
தற்போது இடைத்தேர்தலில் நிற்கும் திமுக வேட்பாளர் ஆனந்த் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த இடைத்தேர்தலில் வென்றவர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே நின்று வென்று முதல்வர் பொறுப்பு ஏற்றவர் நிற்கவும் முடியவில்லை. பிரசாரத்திற்கும் வரமுடியவில்லை. ஆனால் கடிதம் மட்டும் அனுப்பியுள்ளார். கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளர். ஒரே ஒரு கையெழுத்து போட்டு அதை காப்பி எடுத்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் சதியின் காரணமாகவும், விதியின் காரணமாகவும் பதவி இழந்தேன் என கூறியுள்ளார். உண்மைதான் சதி, கூட்டு சதியால் பதவி இழந்தார். உடன்பிறவா சகோதரி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஒன்றாக சதி செய்து சொத்து சேர்த்தார். சதி செய்து சேர்த்த சொத்துக்கு பெங்களூர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு விதி. அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்கு வர வாய்ப்பில்லை, சூழல் இல்லை என கூறுகிறார். தேர்தல் களத்தில் போட்டியிட முடியாது என சட்டம் கூறுகிறது. பிரசாரத்திற்கு போக கூடாது என சட்டம் இல்லை. வராமல் போனதற்கு சூழல் என்றால் உடல்நிலை சரியில்லையா அல்லது மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி போக கூடாது என்றார்களா. தலைவர் கலைஞர் உடல்நிலை சரியில்லை எனவே தேர்தல் பிரசாரத்திற்கு வாய்ப்பில்லை என முரசொலியில் கூறியுள்ளார். ஜெயலலிதா சொன்னாரா, மொட்டையாக சூழ்நிலை வாய்ப்பில்லை என்றார்.
4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் என குற்றவாளி முகத்தை வைத்து உங்களை பார்க்க வெட்கப்பட்டு, சங்கடப்பட்டு ஜெயலலிதா வரவில்லை. இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் தான் ஆட்சியில் நீடிக்க முடியும் எனவோ, திமுக வெற்றி பெற்றால் ஆட்சிக்கு வரும் என்றோ இல்லை. திமுக ஆட்சிக்கு வரும், அது 2016ல் ஆட்சிக்கு வருவோம். அதற்கு சாட்சியாக, சான்றாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமைய வேண்டும்.
மக்களுக்கு எதிரான ஆட்சிக்கு புத்திபுகட்ட, பாடம் புகட்ட இந்த இடைத்தேர்தல் பயன்பட வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு சாதனை செய்துள்ளது. ஆனால் இந்த ஆட்சியில் வேதனைகளை தான் கூறலாம். இந்த ஆட்சியில் கொடுமையும் சோதனையும் நடக்கிறது.
பினாமி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீரங்கத்தில் வலம் வந்தனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கொடுக்க வலம் வந்தனர். தமிழகத்தில் மக்கள் முதல்வர், பினாமி முதல்வர் என டபுளாக உள்ளது. டிஜிபி டபுள், தலைமை செயலாளர் டபுள். இந்த ஆட்சியில் அனைத்தும் டபுள் தான். 4 வருடம் அதிமுக ஆட்சியில் தற்போது பினாமி ஆட்சி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கிறது.
மருத்துவமனைகளில் தான் ஓ.பி உண்டு. அதாவது அவுட்பேசண்ட். வெளிநோயாளிகள் மருத்துவம் பார்க்க இப்படி கூறுவார்கள். தற்போது உள்ள ஓ.பி (ஓ.பன்னீர்செல்வம்) அவுட்பேசண்ட். இவர் முதல்வர் என கூறி கொள்ள வெட்கப்படுகிறார்.
அனைத்து பகுதிகளிலும் ரூ.5 ஆயிரம் கொடுக்க கூறி ரூ.2 ஆயிரத்தை மட்டும் வழங்கிவிட்டு மீதி ரூ.3 ஆயிரத்தை ஊருக்கு எடுத்து சென்றனர். பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்க திட்டம் போட்டுள்ளனர். விலைவாசி விஷம் போல் ஏறியுள்ளது. விலைவாசியை குறைப்போம் என கூறி வெற்றி பெற்றவர்கள் விலைவாசியை கட்டுப்படுத்தப்பட கூட நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுகவின் இரட்டை ஆட்சிக்கு புத்தி புகட்ட நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த்திற்கு வெற்றி தேடி தரவேண்டும் என்றார் ஸ்டாலின்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications