சட்டசபையை எப்ப கூட்டுவீங்க முதல்வர்? கேட்கிறார் மு.க.ஸ்டாலின்
சென்னை: விவாதிக்க நிறைய பிரச்சினைகள் இருக்கிறது முதல்வர் பன்னீர் செல்வம் சட்டப்பேரவை கூட்டாமல் இருப்பது ஏன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், சட்டப் பேரவையினைக் கூட்டி, தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான பிரச்சினைகள் எழுகின்றன. மாநிலத்திற்கு புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஆண்டு தோறும் அக்டோபர் திங்களில் கூட்டப்படும் குளிர்காலத் தொடரும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு பொய்க் காரணம் கூறி இலங்கை அரசு தூக்குத் தண்டனை விதித்து, அதனைக் கண்டித்து தமிழக அரசு சார்பிலும், அனைத்துக் கட்சிகள் சார்பிலும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்தத் தண்டனையைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
எனவே இந்த நிலையில் தமிழகச் சட்டப் பேரவையினைக் கூட்டி, தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானத்தினை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். இதுதவிர தமிழக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவைகளைப் பற்றியும் பேரவையில் விவாதிக்க வேண்டியியுள்ளது.
எனவே, தமிழகச் சட்டப் பேரவையினை கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழக முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications