Exclusive: நாமே மோடியிடம் சரணடைந்துவிட்டால் என்ன.. சசிகலா கணவர் நடராஜன் மாஸ்டர் பிளான்
நடராஜனின் ராஜ தந்திரங்கள் மோடியிடம் எடுபடுமா அல்லது, மோடி ஏற்கனவே வகுத்த வியூகத்தில் காய்களை நகர்த்துவாரா என்பது அவர் நடராஜனை சந்திப்பாரா இல்லையா என்பதை வைத்து அறிய முடியும்.
சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க சசிகலா கணவர் எம்.நடராஜன் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் அரசியல் களத்தை நிர்ணயித்தவர் நடராஜன் என்ற பேச்சு உண்டு. ஆனால் இப்போது வாய்ப்பு தனது மனைவியான சசிகலாவை தேடி வந்தபோது முழுமையாக பயன்படுத்த முடியாமல் உடல்நலக்குறைவு சதி செய்துவிட்டது என்ற ஆதங்கத்தில் உள்ளாராம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளாகி பெங்களூர் சிறையில் சசிகலா இருக்கிறார். இப்போது நடராஜன் தனது நாட்டியத்தை ஆடியிருக்க முடியும். ஆனால் அதில்தான் சிக்கல்.

சந்திக்க மறுப்பு
இந்த நேரத்தில் உடல்ரீதியாக பலவீனப்பட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்தில் நடராஜன் தவித்து வரும் நிலையில், சசிகலாவை சந்தித்து ஆலோசிக்க அவர் முயற்சித்த போதும் அவரை சந்திக்க மறுத்தே வருகிறாராம் சசிகலா.

மோடியுடன் சந்திப்பு
இந்த நிலையில், சசிகலாவின் மறு சீராய்வு மனு சார்பாக மோடியை சந்தித்து சில உதவிகள் கேட்பதற்காக முயற்சி எடுத்துள்ளார் நடராஜன். இதற்காக பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் கேட்டு கடிதம் தந்திருக்கிறார்.

பாஸ்வானை பிடித்த நடராஜன்
ஆனால் மோடி அலுவலகத்திலிருந்து நோ ரெஸ்பான்ஸ். இந்தநிலையில், வேறு ஒரு சோர்ஸ் மூலம் ராம்விலாஸ்பஸ்வானை பிடித்துள்ளார் நடராஜன். தற்போது, பஸ்வான், நடராஜனுக்கு உதவ பிரதமர் அலுவலகத்தில் முயற்சிக்கிறாராம்.

எடுபடுமா
நடராஜனின் ராஜ தந்திரங்கள் மோடியிடம் எடுபடுமா அல்லது, மோடி ஏற்கனவே வகுத்த வியூகத்தில் காய்களை நகர்த்துவாரா என்பது அவர் நடராஜனை சந்திப்பாரா இல்லையா என்பதை வைத்து அறிய முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications