ஹேபியஸ் கார்பஸ் தாக்கல் செய்த மதனின் தாய்: பதில் அளிக்க போலீசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கங்கையில் சமாதியாகப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான தயாரிப்பாளர் மதனின் தாயார் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) குறித்து பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
கங்கையில் சமாதியாகப் போவதாக சினிமா பட தயாரிப்பாளரான வேந்தர் மூவிஸ் மதன் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். அவர் மாயமான தகவல் கடந்த 29ம் தேதி வெளியானது. ஆனால் மதனுக்கு என்ன ஆனது, அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை.

அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு அவரின் தாய் மற்றும் இரண்டு மனைவிகளும் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே மதன் ஒரு இளம்பெண்ணுடன், நிறைய பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதனின் தாயார் தங்கம், தனது மகனின் நிலை பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறினார். இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
கடந்த 29ம் தேதி மாயமான மதனை ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என தங்கம் தனது மனுவில் தெரிவித்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து வரும் 8ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications