சசியை முன்மொழிந்த மதுசூதனன் ஓபிஎஸ் வீட்டில்.. திடீர் ஆதரவால் பரபரப்பு- சிதறுகிறது அதிமுக!
சசிகலாவை தீவிரமாக ஆதரித்து வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இன்று திடீரென நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நேரில் சந்தித்து திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுக உடைந்து சிதறுவது உறுதியாகி உள்ளது.
அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்றுவதை சசிக்க முடியாத நிர்வாகிகள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணிதிரண்டுள்ளனர். சசிகலாவுக்கு எதிரான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தாம் அதிமுக பொருளாளர் என்பதால் கட்சி வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன் சசிகலா இடைக்கால பொதுச்செயலர் என்பதால் பொதுச்செயலர் பதவியும் காலியாகவே இருக்கிறது எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.
இதனால் சசிகலாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவரான மதுசூதனன் திடீரென சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வருகை தந்து தமது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா பதவியேற்க வேண்டும் என முதலில் வலியுறுத்தியவர் மதுசூதனன்.
தற்போது மதுசூதனன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளது மன்னார்குடி கோஷ்டியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிமுகவில் அவைத் தலைவர் பதவி முதன்மையானது. அதற்கு அடுத்தது பொதுச்செயலர்; பொருளாளர் பதவிகள்.
தற்போது அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் இணைந்திருப்பதால் அதிமுக உடைந்து சிதறுவது உறுதியாகிவிட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications